- Advertisement -
பிப்ரவரி ஆறாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

06.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
