- Advertisement -
பிரபல தமிழ் நடிகை, தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார். இது தொடர்பான திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. அடுத்து தமிழில் அர்ஜூனுடன் மருதமலை, பிரசாந்துடன் ஜாம்பவான், லீ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மீரா சோப்ரா. இதன் பிறகு தமிழில் இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், இதுவரை தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார்,


கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட்டில் அவர் அதிக கவனம் செலுத்தினார். பிரபல பாலிவுட் நடிகைககள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகிய இருவரும் மீரா சோப்ராவின் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மீரா சோப்ராவிடம் கேள்விகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தனது நீண்ட நாள் காதலரும், தொழில் அதிபருமான ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்

