நம்மில் பெரும்பாலானவர்கள் கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றினாலே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் ஒரு பொருளாக இருந்தாலும் இது நம் ரத்தத்தில் அதிகமாகும் போது உடலில் பல அறிகுறிகளை உண்டாக்குகிறது. குறிப்பாக இதய நோய்களை ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ரலால் ஏற்படும் நோய்களில் ஒரு சிலவை குணப்படுத்த முடியாத இருந்தாலும் ஒரு சிலதை தவிர்க்கக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம் எந்த ஒரு நோயையுமே ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த கொலஸ்ட்ராலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இப்போது கொலஸ்ட்ராலால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை காண்போம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இரவு நேரங்களில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இரவு நேரங்களில் இது அறிகுறிகளை ஏற்படுத்தவில்லை என்றாலும் வருங்காலத்தில் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் இது உயர் கொழுப்பு அளவுகள், பெருந்தமணி தடிப்பு தோல் அலற்சி, தமனிகள் சுருங்குதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அது மட்டும் இல்லாமல் அதிக கொலஸ்ட்ரால் காரணத்தால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுமாயின் எந்த நேரத்திலும் அறிகுறிகள் தென்படலாம். தமனிகளில் கொலஸ்ட்ரால் தேங்கும் நிலை ஏற்பட்டால் கால்கள் மரத்து போவது, உடல் பலவீனம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் உண்டாகிறது.
இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தூங்கும் நேரத்தில் ஒருவிதமான அசௌகர்யத்தை ஏற்படுத்தி விடுகிறது.
உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.