- Advertisement -
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான பெயர் இன்னும் தேர்வு செய்யப்படாததால் தற்காளிகமாக தளபதி 67 என்று பெயர் வைத்து பட வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார்.

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக அமைந்துள்ளதால் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளதாக தெரியவருகிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து பட நிறுவனம் இன்று விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயுடன் திரிஷா இணைவது 14 ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


