- Advertisement -
மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இந்த உயர்மட்ட பாலம் 20.565 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்படவுள்ளது. மொத்தம் 604 தூண்களில் 375 தூண்கள் கூவம் ஆற்றுக்குள்ளும், 210 தூண்கள் கடலோர மண்டல மேலாண்மை பகுதிக்குள்ளும் அமைக்கப்படவுள்ளது. உயர்மட்ட பாலத்துக்காக எழுப்பப்படும் தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்துக்கு தடை ஏற்படக்கூடாது என ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.

கூவம் ஆற்றை மேலாண்மை செய்துவரும் பொதுப் பணித்துறையுடன் கலந்தாலோசித்து ஆற்றின் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 4 வழிச்சாலையாக அமையவுள்ள திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
