Homeசெய்திகள்சினிமாதடைகளை தாண்டி ரிலீஸுக்கு தயாராகி வரும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'!

தடைகளை தாண்டி ரிலீஸுக்கு தயாராகி வரும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

-

- Advertisement -

நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை 2024 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தலுக்குப் பிறகு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.தடைகளை தாண்டி ரிலீஸுக்கு தயாராகி வரும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'! இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒன்றாக நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தடைகளை தாண்டி ரிலீஸுக்கு தயாராகி வரும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'!அதைத்தொடர்ந்து முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் இன்று வரையிலும் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பல்வேறு தடைகளை தாண்டி வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ