Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல்

-

- Advertisement -

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கே எஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல் நாம் தமிழர், தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் கேஎன் நேரு, சு முத்துசாமி, நாசர், ராமச்சந்திரன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் அக்ரஹாரம், அன்னை சத்யா நகரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். அமைச்சர்களுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Home

we-r-hiring

முன்னதாக 15-வது வார்டுக்கு உட்பட்ட தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சு முத்துசாமி, ஈரோடு மாநகராட்சியில் திமுக அரசின் சார்பில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக கூறிய அவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார். இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இன்னும் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் தொடங்கவில்லை.

MUST READ