spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை?- விரிவான தகவல்!

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

"10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்"- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
File Photo

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

we-r-hiring

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!

இந்த நிலையில், தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பா.ம.க. போட்டியிடும் 10 மக்களவைத் தொகுதிகளின் பட்டியலை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மார்ச் 22) வெளியிடுகிறார்.

MUST READ