Homeசெய்திகள்தமிழ்நாடுஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் பாஜக யாருக்கு கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

we-r-hiring

இந்நிலையில் டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தனித்தனியாக அடுத்தடுத்து சந்தித்து பேசிவருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பாஜக அறிவிக்காத நிலையில், அதுதொடர்பான பேச்சுவார்த்தையில் பழனிசாமி ஈடுபடுவதாக தெரிகிறது. இதனிடையே இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதாக அறிவித்திருந்த எடப்பாடி தரப்பு வேட்புமனு தாக்கலை திடீரென ஒத்துவைத்து 7ம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளது.

Home

முன்னதாக ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக எவ்வித நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் இருந்ததால் பாஜக தலைவர்கள் புகைப்படம் இன்றி பணிமனையை திறந்து தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் பின்வாங்க மாட்டோம் என எடப்பாடி தரப்பும், பாஜக வேட்பாளர்களை அறிவித்தால் தங்கள் வேட்பாளரை உடனடியாக திருப்பி பெறுவோம் என ஓபிஎஸ் தரப்பும் அறிவித்திருந்தன. இதனிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

MUST READ