Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!

கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!

-

- Advertisement -

கருப்பை நீர்க்கட்டி ஏற்பட காரணங்கள்:

கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது தான் கருப்பை நீர்க்கட்டி. இது பயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவில் இருந்து தோன்றுகிறது. ஒரே ஒரு செல் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிய கட்டியை தோன்றச் செய்கிறது. அதிகமான பேறுகாலம், மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, ரத்த கொதிப்பு, நீரழிவு நோய், உடல் பருமன், தைராய்டு, அடிக்கடி அபார்ஷன் செய்வது போன்ற பிரச்சனைகளால் இந்த கருப்பை பிரச்சினை உண்டாகிறது. மேலும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளினாலும் கருப்பை நீர்க்கட்டி உண்டாகலாம்.

எனவே கருப்பை நீர்க்கட்டியை தடுக்ககருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!

தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதாவது குறைந்தது 45 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இயற்கை உணவுகளான கீரை, காய்கறி, நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

கருப்பை நீர் கட்டியை குணமாக்க இரும்புச்சத்து அவசியம். ஆகவே கீரை ஆகியவற்றுடன் சேர்த்து பேரிச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இனிப்பு வகைகள் மாவுச்சத்து அதிகம் உள்ள பொருள்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!

அதேசமயம் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருத்தல் நல்லது. குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் உடல் சோர்வு தரும் வேலைகளை செய்யக்கூடாது.

இருப்பினும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகினால் தான் குழந்தையின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

MUST READ