எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சமூக வலைத்தலம் இன்று இன்னும் அதிக பரபரப்புடன் காணப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தளபதி 67 பற்றி வரும் அடுத்தடுத்த விறுவிறுபான அப்டேட்டுகள் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படம் குறித்த பல தகவல்பகள் கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.


அந்த வகையில் படத்தின் முதல் நாள் பூஜை, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல செய்திகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில், தற்போது இன்னும் சுவரசியமாக படத்தின் பெயர் என்ன என்று கேள்வியுடன் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜயின் புதிய படத்தின் பெயர் “லியோ”.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லியோ படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் போன்ற முன்னனி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் லியோ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.


