ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’ வெளியாக உள்ளது.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் மம்முட்டியின் மகனும், முன்னணி நட்சத்திரமுமான நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அபிலாஷ் ஜோஷி கூட்டணியின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்திலும் துல்கர் சல்மானின் முரட்டுத்தனமான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் உள்ள காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


