Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தலில் பழனிசாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை

இடைத்தேர்தலில் பழனிசாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை

-

- Advertisement -

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

Image

we-r-hiring

அப்போது பேசிய அண்ணாமலை, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை. தலையிடப்போவதுமில்லை. ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றைய வேண்டும் என்றும் சொல்லவில்லை. இந்த தேர்தலில் சின்னம் கிடைத்து ஒரு வேட்பாளர் அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். அதிமுகவினர் பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என கூறினோம். பழனிசாமி வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. எங்கள் வேண்டுகோளை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என பழனிசாமியிடம் கூறினோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும் என்றே பாஜக எதிர்பார்க்கிறது. அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என விரும்பினோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும் என்றே பாஜக எதிர்பார்க்கிறது.

Home

அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என விரும்பினோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது கூடுதல் பலம் கொடுக்கும். அதிமுக வேட்பாளருக்காக ஈரோட்டில் கடுமையாக பாரதிய ஜனதா கட்சியினர் உழைப்போம். தேர்தல் அறிவித்த உடனேயே பாஜக போட்டியிடவில்லை என இரு தலைவர்களிடமும் கூறிவிட்டோம். கூட்டணி தர்மத்தை கருதி பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடாது” எனக் கூறினார்.

MUST READ