Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற வேண்டும்- அண்ணாமலை

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற வேண்டும்- அண்ணாமலை

-

- Advertisement -

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என தமிழக பா.ஜ.க‌. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

chennai gun shooting

we-r-hiring

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் நிலைப்பாடு எடுக்க உள்ளோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 8 நாட்களாக பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா அறிவுறுத்தல் பேரின் பேசினேன். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.‌ இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவை நாம் பார்த்தோம். எங்களின் ஒரே நோக்கம் ஒரு வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். அவருடன் இணைந்து நாங்கள் அவரை வெற்றி பெற செய்வோம். எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நேற்று அகில இந்திய பொதுச்செயலாளர் சொன்னது ஒரு வேட்பாளர் மட்டுமே தேவை. எங்கள் கூட்டணி 2024-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த இருக்கிறது. எங்களின் ஒரே வேண்டுகோள்‌ மீண்டும் அ.தி.மு.க. சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.

Home

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு. வேட்பாளர் என எடுத்துக்கொண்டால் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். தேர்தல் வெற்றிக்காக இரட்டை இலையை கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சினையிலும் நாங்கள் தலையிட மாட்டோம். பிற கட்சிகளை வலு இழக்க செய்து நாங்கள் வளர வேண்டாம். நாங்கள் சுயமாக தான் வளர வேண்டும். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மேலிட இணைப்பொறுப்பாளராக நியமித்துள்ளதால் வேலைப்பளு மீண்டும் அதிகரித்துள்ளது. நான் ஒன்று நினைக்கும் போது கடவுள் ஒன்று நினைக்கிறார். யாத்திரையும் நடக்க வேண்டும். தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

MUST READ