spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய் சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம்!

நடிகர் விஜய் சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம்!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜே.குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.

இந்த சுயமரியாதை திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி தலைமையேற்று நேற்று(03.02.2023) காலை சென்னையில் நடத்திவைத்தனர்.

we-r-hiring

உலகில் சாதி, மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம், அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அவ்வப்போது அதை பொது வெளியில் பேசி வரும் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜே.குமரன், சாதி மதம் கடந்து சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் நடைபெற்றது.

MUST READ