spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் 'கோட்' படக்குழு!

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் ‘கோட்’ படக்குழு!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் 'கோட்' படக்குழு!இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் அடுத்ததாக வருகின்ற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே கோட் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்கிறது.அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் 'கோட்' படக்குழு! நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்றுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் துபாயில் சில ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படக்குழு தேர்தல் வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு  சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ