நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் (வயது74) உடல் நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.
நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும். முத்துலட்சுமி, சுப்புலட்சுமி, சண்முகப்ரியா, தனலட்சுமி என்ற நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து முடித்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே மூச்சு திணறல் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்போடு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை முடிந்து நான்கு நாட்களுக்கு முன்பாக வீடும் திரும்பியுள்ளார். இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு அளவில் உயிரிழந்துள்ளார்.

பழம்பெரும் நடிகை டி.பி முத்துலட்சுமியின் மகன் ஆனா இவர் 1988 ஆம் ஆண்டு ‘வீடு மனைவி மக்கள்‘ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.
இவர் தாயா தாரமா, நல்ல காலம் பொறந்தாச்சு, பந்தா பரமசிவம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார்.

20 மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


