spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநானியின் ஹாய் நான்னா படத்திற்கு சர்வதேச விருது!

நானியின் ஹாய் நான்னா படத்திற்கு சர்வதேச விருது!

-

- Advertisement -

நடிகர் நானி தமிழ் சினிமாவில் வெப்பம், நான் ஈ, தசரா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். நானியின் ஹாய் நான்னா படத்திற்கு சர்வதேச விருது!அதே சமயம் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது. இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக சீதராமம் படத்தின் மூலம் கவனம் பெற்ற மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார்.
அப்பா – மகள் உறவை மையப்படுத்தி கணவன் மனைவி இருவருக்குமான ஆழமான காதலை எடுத்துச் சொல்லும் படமாக இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை சௌர்யுவ் இயக்கியிருந்தார். வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஹேசம் அப்துல்லாவின் இசையிலும் இந்த படம் வெளியாகி இருந்தது.

சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்டம் பழமொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் தற்போது ஏதன்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச விருதை வென்றுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ