பத்மபூசன் விருது பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மறைந்த பாடகி வாணி ஜெயராமின் இசைப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உத்தரவிட்டார்.


இதன்படி தமிழக காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு, வாணி ஜெயராம் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இன்று மாலை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம் செய்வதற்கு முன்பாக ஆயுதப்படை காவலர்கள் 10 பேர் அணிவகுப்புடன் வானத்தை நோக்கி மூன்று சுற்றுகளாக சுட்டு, 30 துப்பாகி குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


