Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்

-

- Advertisement -

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.

Image

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள 2600 பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 90 சதவீதம் பேர், எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்கள் மற்றும் அறிக்கையுடன் டெல்லி செல்ன்றார் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். அவருடன், சி.வி.சண்முகம் மற்றும் வழக்கறிஞர்களும் உடன் சென்றனர்.

Home

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளார் தமிழ்மகன் உசேன். தமிழ்மகன் உசேன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக ஓபிஎஸ் அணி புகார் எழுப்பியிருந்த நிலையில், தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவை ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளது.

MUST READ