Homeசெய்திகள்தமிழ்நாடுமின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி?

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி?

-

- Advertisement -

மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைப்பதில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

ஆதார் இணைப்பு அதிக அளவில் நடந்திருப்பதாக கணக்கு காட்டுவதற்காக தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் இணைப்புகளுடன் வீட்டு உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளருக்கு தெரியாமலேயே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பது கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் இணைப்பு அதிக அளவில் நடந்திருப்பதாக கணக்கு காட்டுவதற்காக தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதால் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டிருப்பதாக மின்வாரியம் கவலை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Home

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கியது குறிப்பிடதக்கது.

MUST READ