Homeசெய்திகள்தமிழ்நாடுவேட்பாளரை திரும்ப பெற்ற ஓபிஎஸ்க்கு நன்றி- செங்கோட்டையன்

வேட்பாளரை திரும்ப பெற்ற ஓபிஎஸ்க்கு நன்றி- செங்கோட்டையன்

-

- Advertisement -

அதிமுக எடப்பாடி அணி வேட்பாளருக்கு, ஓபிஎஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்திருப்பதற்கு கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.

sengottaiyan

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் , இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பான வழக்கில் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்தால் இரட்டை இலை சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஓபிஎஸ் தரப்பு உட்பட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பி கையெழுத்து பெற்று இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கிறார். இதன் தொடர்ச்சியாக, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தங்கள் தரப்பு வேட்பாளரை புறக்கணித்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டும் எழுப்பியது.

we-r-hiring

இந்நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன் உட்பட வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியை சேர்ந்த கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை தோல்வியை சந்திக்க கூடாது என்பதால் ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் செந்தில்முருகன் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை ஜெயிக்க வேண்டும் போட்டியில் இருந்து நாங்கள் விலகிவிட்ட சூழலில் எடப்பாடி தரப்பு யாரை வேட்பாளராக அறிவித்தால் எங்களுக்கு என்ன? அந்த வேட்பாளருக்காக இல்லை என்றும் இரட்டை இலையை கட்டிக்காக்கவும் வெற்றிப் பெறவும் நாங்கள் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தார். இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Home

ஓபிஎஸ் அணியின் இந்த அதிரடி முடிவு குறித்து, ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “ஒளிரும் ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்த உடன் எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார், அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.

MUST READ