
இந்தியாவில் பஜாஜ் பல்சர் என் 250 ரக இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இருசக்கர வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி, இந்தியாவின் ஆறு மெட்ரோ நகரங்களில் நடைபெற்றது.
இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!
அந்த வகையில், சென்னை காட்டுப்பாக்கத்தில் பஜாஜ் பல்சர் என் 250 ரக இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பஜாஜ் நிறுவனத்தின் தென்மண்டல துணைத் தலைவர் நரசிம்மன், தென்மண்டல விற்பனை மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், பஜாஜ் உரிமையாளர், சென்னையில் பஜாஜ் ஷோரூம் கிளைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள், பைக் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!
இந்த இருசக்கர வாகனம் குறித்து பஜாஜ் நிறுவனத்தின் தென்மண்டல துணைத் தலைவர் நரசிம்மன் கூறுகையில், “பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த இருசக்கர வாகனத்தைத் தயாரித்துள்ளோம்; 25 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களைக் கவரும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.