Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பா? ஜெயக்குமார் விளக்கம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பா? ஜெயக்குமார் விளக்கம்

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க இருப்பதாக தகவல் கசிந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை சந்தித்தனர். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்தனர்.

we-r-hiring

eps ops

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில், பொய் பரப்புரைகள் செய்யப்படுகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்பது என்பதே முரண்பாடுதான். எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுவின் பெயரை சொல்ல பன்னீர்செல்வத்துக்கு வாய் வலிக்கிறதா? இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? திமுக சார்பு நிலைபாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

Home

ஈரோடுகிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறும் முயற்சியில் திமுக ஈடுபட்டுளது. திமுகவின் பி டீமாக இருந்துவரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சித்தார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ