spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிசில் போடு..... இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்கும் 'கோட்' ஃபர்ஸ்ட் சிங்கிள்!

விசில் போடு….. இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்கும் ‘கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

-

- Advertisement -

கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தற்போது தனது 68 ஆவது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விசில் போடு..... இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்கும் 'கோட்' ஃபர்ஸ்ட் சிங்கிள்!இந்த படத்தை சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதேசமயம் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

இந்த பாடலை நடிகர் விஜய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. வழக்கமாக விஜய் படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகி வரும். அதைப்போல இந்த விசில் போடு பாடலும் இணையத்தில் செம ட்ரண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த பாடலை மொபைல் ரிங்டோனாகவும் செட் செய்து வருகின்றனர்.

MUST READ