Homeசெய்திகள்தமிழ்நாடுபோதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கூண்டோடு கைது

போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கூண்டோடு கைது

-

- Advertisement -

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது குறித்து தகவல் வந்தன. போலீசார் நோட்டமிட்டதில் சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர் . அவர்களை பிடித்து விசாரித்ததில் நான்கு பேரும் போதைக்காக வலிநிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்று வந்தது தெரிய வந்தன.

arrested

we-r-hiring

முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர் . போதை மாத்திரை வியாபாரிகளிடமிருந்து நைட்ரவேட் – 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள் , ஊசி சிரஞ்சிகள், 3 செல்போனை பறிமுதல் செய்திருக்கின்றனர். பின்னர் அந்த மாத்திரை எங்கிருந்து வந்தது ? பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மாத்திரை எப்படி வாங்கப்பட்டன ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் போதை பிரியர்கள் போதைக்காக மாத்திரை வாங்க செல்லும் லொகேசனை கேட்டு அதிர்ந்திருக்கின்றனர்.

கோயமுத்தூரில் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மருந்தகங்களில் மருந்து தரக்கூடாதென விடுத்த எச்சரிக்கையையடுத்து மாத்திரைகளை வாங்க போதை பிரியர்களுக்கு கடும் கெடுபிடி ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்த போதை பிரியர்களுக்கு கண்ணில் பட்டது கர்நாடகா. தமிழ்நாடு அளவுக்கு கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் கர்நாடக மாநிலம் ஹூப்ளி என்ற இடத்துக்கு சென்று போதைக்காக வலி நிவாராணி, தூக்கம், மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வாங்கி வந்து கோயமுத்தூரில் விற்கின்றனர். அதாவது அங்கிருந்து வாங்கப்படுகின்ற மாத்திரைகள் ஐந்து மடங்கு லாபத்துடன் கோயமுத்தூர் போதை பொருள் பிரியர்களுக்கு ஆசாமிகளால் சப்ளை செய்யப்படுகின்றன. கல்லூரி மாணவர்கள் , ஐ டி ஊழியர்கள் , பொதுவான போதை பிரியர்கள் என கர்நாடகா மாத்திரைகளை நுகர்ந்திருக்கின்றனர்.

Home

இந்த நிலையில் கைதானவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் பொருட்டு தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடரும் என போலீஸ் தரப்பில் தெரிவித்து இருக்கின்றனர் . முந்தைய வாரம் போதை மாத்திரை விற்ற கும்பல் கைதாகியிருந்த நிலையில் மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம் நான்குபேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கின்றனர்.

MUST READ