spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்புவை இயக்கும் சுதா கொங்கரா?... அடுத்த படத்திற்க்கு தயாராகும் சிம்பு...

சிம்புவை இயக்கும் சுதா கொங்கரா?… அடுத்த படத்திற்க்கு தயாராகும் சிம்பு…

-

- Advertisement -
கோலிவுட்டின் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு. சுட்டியாக அறிமுகமான நாள் முதல், நாயகனாக வெளுத்து வாங்கும் இன்று வரை சிம்புவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தந்தையின் படத்தில் குழந்தையாக நடித்து சினிமாவிக்கு அறிமுகமான சிம்பு, இன்று கோலிவுட்டி முக்கிய முகமாக மாறியிருக்கிறார். காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்‌ஷன் என பல பரிமாணங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதுமட்டுமன்றி கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படப்பிடிப்பிலும் சிம்பு பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், சிம்பு நடிக்கும் 50-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனது 50-வது திரைப்படம் மிகவும் ஸ்பெஸலாக இருக்க வேண்டும் என விருப்பப்பட்ட சிம்பு, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ