- Advertisement -
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இரண்டாவது கட்டமாக 40 கொத்தடிமையாளர்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் 4.05 லட்சம் மதிப்பில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் ’சிறகுகள்’ என்ற முதல் கட்ட செங்கல் சூளையை கொத்தடிமைகளாக இருந்து மீட்ட 300 பேருக்கு செங்கல் சூளை அமைத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களை முதலாளியாக மாற்றினார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 40 கொத்தடிமையாளர்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் 4.05 லட்சம் ரூபாய் மதிப்பில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து அவர்களையும் முதலாளியாக ஆக்கினார்.


