Homeசெய்திகள்அரசியல்இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும்

இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும்

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12ஆம் தேதிக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

we-r-hiring

சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை, தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் நிர்பந்திக்கவில்லை என தினகரன் தெரிவித்தார்.

மேலும் எம்.ஜி.ஆரிடமும், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாகாக இருந்தது. தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது.

Home

நிதி ஆதாரத்தை கொடுத்தாலும் இரட்டை இலை சின்னத்தை வைத்து ஐந்தாயிரம் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடியும். ஈபிஎஸால் வெற்றி பெற முடியாது என்றார். மேலும், அவர் பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும் என்றார் டி.டி.வி. தினகரன்.

MUST READ