அதிரி புதிரியாக வெளியானது டீசர்… தலைவர்171 டைட்டில் இதோ…
- Advertisement -
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தின் தலைப்பை படக்குழு டீசருடன் அறிவித்துள்ளது.

கோவையில் பிறந்து இன்று கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தனிப்பெரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் தொடங்கியது. யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட இயக்குர் லோகி. மாநகரம் படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகரிடம் அழைத்துச் சென்றது. கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி அவரை முன்னணி இயக்குநராகவும் கொண்டு சேர்த்து.

இதைத் தொடர்ந்து, கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யை வைத்து மாஸ்டர், படங்களை இயக்கினார். இறுதியாக லியோ படத்தை இயக்கினார். இதில் விஜய் உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ரஜினியை இயக்குகிறார். ரஜினி நடிக்கும் 171-வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டு உள்ளது.