spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா..... வைரலாகும் வீடியோ!

படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா….. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளார். படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா..... வைரலாகும் வீடியோ!அதன்படி நடிகை திரிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகை திரிஷா கடைசியாக லியோ, தி ரோட் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா திரைப்படத்திலும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் விஜயின் கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரிஷா டோவினோ தாமஸ் உடன் இணைந்து ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது நடிகை திரிஷா ரசிகர்களை சந்தித்துள்ளார். நடிகை திரிஷா, கூட்டம் கூட்டமாக திரண்டு வந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார். திரிஷாவை கண்ட ரசிகர்களும் ஆரவாரத்துடன் தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேசமயம் இது தொடர்பான வீடியோவையும் நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ