spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!

இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!

-

- Advertisement -

நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் 85 பள்ளிகளை சேர்ந்த 4000 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

we-r-hiring

சிறந்த முறையில் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்து மாணவர்களை பாராட்டிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பரிசுகளையும் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவில் ஏற்படுமா என்பது குறித்து மண்டல வாரியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பிப்ரவரி மாதத்தில் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை நாள்தோறும் 10 டிகிரி வரை வித்தியாசப்படுவதால் தமிழகத்தில் சில நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் இது படிப்படியாக குறையும் எனவும் தெரிவித்தார்.

MUST READ