- Advertisement -
சினிமாவில் ஹிட் அடித்த பழையா கிளாஸ் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வது தற்போது டிரெண்டாகி வருகிறது. நல்ல திரைப்படங்கள் மீண்டும் வெளியீடு செய்யப்படும்போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியானது. அதே போல, மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, ஆகிய திரைப்படங்களும் தமிழகத்திலும், தெலுங்கு தேசத்திலும் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் கடந்த 20-ம் தேதி ரி ரிலீஸ் ஆனது. கடந்த 3 நாட்களில்சுமார் 14 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதுபோல ரி ரிலீஸ் படங்களால் வாரந்தோறும் வெளியாகும் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று குரல் எழுந்துள்ளது. இந்த ஆண்டின் இந்த 4 மாதங்களில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் 5 படங்கள் தான் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள். மற்ற 70 திரைப்படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்.




