Homeசெய்திகள்சினிமாவிஷாலின் ரத்னம் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

விஷாலின் ரத்னம் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
விஷால் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் ரத்னம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தமிழில் பல மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் காதல் நாயகனாக அறிமுகமான விஷால், அடுத்ததாக நடித்த சண்டக்கோழி படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வந்தார். விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் ரத்னம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3-வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34-வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை மறுநாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரத்னம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

MUST READ