spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது"- தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

“நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது”- தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது"- தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

we-r-hiring

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ரசவாதி’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம். முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா…… இந்த தேதியில் தான்!

2024-ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு, அம்பேத்கர் சுடர் -பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி- வழக்கறிஞர் அருள்மொழி, மார்க்ஸ் மாமணி- முத்தரசன், காமராசர் கதிர்- பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன்- பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை-எஸ்.என்.சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு – எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர் ஆகியோருக்கு வழங்கப்படவிருக்கிறது. வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா வரும் மே 25- ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ