Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ரசவாதி'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ரசவாதி’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

-

நடிகர் அர்ஜுன் தாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ரசவாதி'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!அந்த வகையில் கடைசியாக போர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் தாஸ். அதேசமயம் மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதற்கிடையில் அர்ஜுன் தாஸ், ரசவாதி எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்பிரமணியன், ஜி எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ரசவாதி'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!இந்த படத்தை மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்குகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரஸ்வதி க்ரியேஷன்ஸ் நிறுவனமும் டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ரசவாதி'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!அதன்படி ரசவாதி படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் எனவும் இந்த ட்ரெய்லரை நடிகர் கார்த்தி, துல்கர் சல்மான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், அனிருத், எஸ் ஆர் பிரபு உள்ளிட்டோர் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற மே 10ம் தேதி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ