spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா...... இந்த தேதியில் தான்!

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா…… இந்த தேதியில் தான்!

-

- Advertisement -

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

1996 இல் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா...... இந்த தேதியில் தான்!இந்த படமும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தைப் போல் ஊழலுக்கு எதிரான கதை களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு சமீபத்தில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மே 16 அன்று சென்னை நேரு அரங்கத்தில் நடைபெறும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா...... இந்த தேதியில் தான்! எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ