- Advertisement -
பிரபல தமிழ் பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிகழ்கள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் உமா. அந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். சுமார் கடந்த 35 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் பல பிரபலமான பாடல்களை பாடி இருக்கிறார். பெற்றோரின் விருப்பத்திற்காக முறையாக இசை கற்றுக் கொண்ட உமா, தனது கல்லூரி நாட்களில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல மேடைக் கச்சேரிகளில் பாடிய உமாவுக்கு, ஒரு இந்தி படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துளள்ளது.


இதையடுத்து, திருமணம் செய்து கொண்ட உமாவும், அவரது கணவர் ரமணனும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் இணைந்து பாடி இருக்கின்றனர். அதன் பின்னர் இருவரும் இணைந்து பிளே பாய் என்ற படத்தில் பாடினர். தொடர்ந்து வெங்கட் ராமன் இசையில் 1977-ம் ஆண்டு கிருஷ்ணலீலா என்ற படத்தில் பாடினார். அந்த நேரத்தில் தான் இளையராஜா இசை அமைத்த நிழழ்கள் படம் வெளியானது.



