spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம்

-

- Advertisement -

தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சந்திரா (39), தருண் பாண்டியன்(13), அசோக் குமார் (28), அன்னக்கிளி (13), லட்சுமி (40), தனலட்சுமி(35) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் டெம்போ டூரிஸ்ட் வேனில் மதுரையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போதும் வென்றான் சோழசாமி கோவில் சித்திரை திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.

we-r-hiring

தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம்

ஆரோக்கிய ஆண்டனி (20) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் எட்டையாபுரம் அடுத்த கீழஈரால் தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் பின் டயர் வெடித்ததில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் செண்டர் மீடியனில் மோதி தலைக்குப்ராக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த 13 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் காயமடைந்தவர்களை, எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான டெம்போ டூரிஸ்ட் வினின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ