- Advertisement -
நடப்பாண்டில் வாக்களிக்காமல் இருப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, வாக்களிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று நடிகை ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கத் தொடங்கினார். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடக்கத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த ஜோதிகா, தற்போது, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக மலையாளத்தில் காதல் தி கோர் என்ற திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்திக்கு சென்ற அவர் மாதவன், அஜய் தேவ்கனுடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்தார்.


தற்போது, பிரபல பார்வைற்ற மாற்றுத்திறனாளி தொழில் அதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை துஷார் இயக்குகிறார். இந்தி மொழியில் உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.



