spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஉயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்

உயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்

-

- Advertisement -

மெரினா கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், பேஸ்கட் பால் வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர்‌ நூற்றாண்டு வளைவு அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 20), ஸ்ரீபாலாஜி (வயது 18) இருவரும் ஒரு இருசக்கர வாகனத்திலும், கெளதம் (வயது 21), முகமது தமீம் (வயது 33) இருவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

we-r-hiring

அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.அப்போது, சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனது இல்லத்திற்கு அவ்வழியாக திரும்பிச் சென்று கொண்டிருந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்துக்குள்ளான நான்கு இளைஞர்களை  உடனடியாக மீட்டதோடு தாமதிக்காமல் அவர்களை தனது காரில் அழைத்து சென்று,  ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் விபத்துக்குள்ளான இளைஞர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கேயே சிறிது நேரம் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெளதம் லேசான காயத்துடன் வீடு திரும்பினார். பாலாஜி காலில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.முகமது தமீம் கை மற்றும் காலில் பலத்த காயத்துடன் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யா தலையில் பலத்த காயத்துடன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேஸ்கட் பால் வீரரான சூர்யா

நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியில் தங்கிருந்து, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாநில அளவில் பேஸ்கட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.சூர்யாவிற்கு தங்கை உள்ளது. குடும்பத்தில் மூத்த மகனான சூர்யா கல்லூரி படிப்பை முடித்து விட்டு குடுபத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரின் தாய், தந்தை காத்திருந்தனர். இந்தநிலையில், சூர்யா விபத்தில் சிக்கியது அவரின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பேஸ்கட் பால் வீரர் சூர்யாவுடன் விளையாடும் அவரது நண்பர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரை பார்க்க வந்திருந்தனர். சூர்யாவின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதுகொண்டிருந்தார்.

சூர்யா உடல்நலம் குணமாக வேண்டுமென்று அவரது உறவினர்கள் மருத்துவமனையில் பிராத்தனை செய்தனர்.

MUST READ