spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாத்ரிஷாவுக்கு திருமணம்... மீண்டும் மீண்டும் எழும் சர்ச்சை...

த்ரிஷாவுக்கு திருமணம்… மீண்டும் மீண்டும் எழும் சர்ச்சை…

-

- Advertisement -
தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து ஷ்யாமுடன் இணைந்து நடித்த லேசா லேசா திரைப்படமும் தமிழில் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமி படத்தில் நடித்த த்ரிஷா முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே முன்னேறினார். பின் திரைவாழ்வில் அவருக்கு ஏறுமுகம் தான். கடந்த 21 ஆண்டுகளில் நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து மட்டும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த த்ரிஷாவின் திரைப்பயணம், மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியின் மூலமாக சூடுபிடிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இறுதியாக விஜய் நடித்த லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து த்ரிஷாவுக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

இந்நிலையில், நடிகை த்ரிஷா திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், உறவுக்கார பையனையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற இதற்கு முன்பாக பலமுறை த்ரிஷாகுக்கு திருமணம் என செய்திகள் வெளியானதும் உண்டு. இருப்பினும், இது தொடர்பாக த்ரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

MUST READ