- Advertisement -
தெலுங்கு மொழியில் நடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று பிரபல மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் சம்யுக்தா மேனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் உருவான உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து, யமந்தன் பிரேமாகதா எனும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.


தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் அடுத்து சுயம்பு படத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார். நிகில் சித்தார்த் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. அண்மையில் ஆதிசக்தி என்ற அமைப்பையும் அவர் தொடங்கியிருந்தார்.

