spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலவ் டுடே படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழா

லவ் டுடே படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழா

-

- Advertisement -

லவ் டுடே படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘லவ் டுடே‘ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

we-r-hiring

இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக  நகைச்சுவை நடிகர் சதீஷ், இயக்குனர் மோகன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா மேடையில் பேசுகையில், AGS உருவான 17 வருடத்தில் 16 வருடத்துக்கு மேல் அந்நிறுவனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி. தனிஒருவன் படத்தின் மூலம் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கோமாளி, லவ் டுடே படங்களை கொடுத்த பிரதீப்புக்கு நன்றி.  இன்றைய இளைஞர்களுக்கு பிரதீப் inspiring ஆக உள்ளார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐசரி கணேஷ் மேடையில் பேசுகையில், இவ்விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பிரதீப் ரங்கநாதனின் 2 படங்களும் 100 நாட்கள் வெற்றி கண்டுள்ளது. அவருடைய அடுத்த படமும் 100 நாட்கள் ஓட வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் மேன்மேல் செல்ல வேண்டும் என்றார்.

நடிகை இவானா மேடையில் பேசுகையில், படக்குழுவுக்கு நன்றி என்னுடைய வாழ்க்கை வேறுமாதிரி செல்கிறது. லவ் டுடே ரிலீஸ் அப்புறம் முதல் நாளில் அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் இருவரின் அரவணைப்பும் மிக பிடித்திருந்தது.

Actress Ivana in Love Today Movie Images HD

பிரதீப் ரங்கநாதனை இயக்குநராகவும் நடிகராகவும் நண்பராகவும் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்றாலே சிறப்புதான். சத்யராஜ் சாருடன் நடிப்பதில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால் நிறைய கற்றுக்கொடுத்தார் நன்றி.

AGS அர்ச்சனா கல்பாத்தி மேடையில் பேசுகையில், பிகில் இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக பேசியது. எனது வாழ்க்கையில் கீழே சென்ற போது ஒரு வெற்றி கொடுத்த படம் லவ் டுடே. பிரதீப் கதை கூறிய பின் பெரிய ஓபனிங் கிடைக்கும் என நம்பினோம். ஒவ்வொரு படத்தை தயாரிக்கும் போதும் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைப்போம். அதில் இந்த படம்‌ முதலிடத்தில் இருக்கும் போது மிக்க மகிழ்ச்சி. படக்குழுவுக்கு நன்றி. பிரதீப் உடைய கால்ஷீட் எங்களிடம்தான் உள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசுகையில், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கதான் இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது எளிதல்ல. அதை செய்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.  ரூ.100 கோடியை உலகம் முழுவதும் இந்த படம் தாண்டி உள்ளது.

மலை ஏறுவதற்கு என்ன வேண்டும் என்பதை தாண்டி முதலில் மலை வேண்டும். அந்த மலை தான் லவ் டுடே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வில் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் பெரிய மலை ஏறி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

MUST READ