spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுநிக்கோலஸ் பூரன் அபார ஆட்டம் - மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு

நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டம் – மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு

-

- Advertisement -

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் குவித்துள்ளது.

we-r-hiring

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 66 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன். இன்று 67வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 67வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ரன் ஏதுமின்றியும் கேஎல் ராகுல் 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 28 ரன்களிலும் தீபக் ஹீடா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  கடைசியில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின  இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

 

MUST READ