கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அப்போது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்றதில் எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி அடித்துச் சென்றனர்.

தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்புத் துறையினர் நான்கு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று விளையாடிய பின் மாயனூர் கதவணைக்கு சுற்றுலாவிற்கு வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
