Homeசெய்திகள்சென்னைபூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது

பூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது

-

- Advertisement -

பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. கன்னியாகுமாரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் இந்த வழக்குக்காக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது தனி கிளை அருகில் டிரோன் பறந்தது. இது குறித்து போலீசார் கண்காணித்தபோது அருகில் நடந்த திருமணத்திற்காக டிரோன் பறக்கவிட்டது தெரியவந்தது.

we-r-hiring

விதிமுறை மீறி டிரோன் பறக்கவிட்ட விஜய் பாலாஜி(37), என்பவரை பூந்தமல்லி போலீசார் கைது செய்து டிரோனை பறிமுதல் செய்துள்ளனர்

MUST READ