- Advertisement -
கவின், அபர்ணா தாஸ்,பாக்யராஜ்,ஐஸ்வர்யா,விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘டாடா’ திரைப்படம்.
படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படத்தை பற்றி பேசி வரும் நிலையில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா தாஸ்’க்கும் இயக்குனர் கணேஷ் K பாபு உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பார்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.


