சூரி நடிப்பில் கருடன்… யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு….
- Advertisement -
சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் நடிகர் சூரியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி இன்று வரை சூரியின் திரைவாழ்வில் முக்கியமான ஒன்று. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார்.

நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோகாவ நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. இதைத் தொடந்து இத்திரைப்படம் வரும் மே மாதம் 31-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், கருடன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது.