Homeசெய்திகள்சினிமாகார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் புது படம்... படக்குழு குறித்த அறிவிப்பு வெளியீடு... கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா கூட்டணியில் புது படம்… படக்குழு குறித்த அறிவிப்பு வெளியீடு…
- Advertisement -

கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் சூர்யா. இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இறுதியாக திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதையடுத்து சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்நிலையில், படக்குழு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார். படத்தொகுப்பாளராக முகமது அலி இணைந்திருக்கிறார். சண்டை காட்சி இயக்குநராக கெச்சா இணைந்துள்ளார். மேலும், படக்குழுவினர் குறித்த அடுத்தடுத்து அப்டேட் அறிவிக்கப்பட்டு வருகிறது.